புதிய கட்சியை தொடங்கினார் அமரீந்தர் சிங்.!

புதிய கட்சியை தொடங்கினார் அமரீந்தர் சிங்.!

Update: 2021-11-03 05:30 GMT

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே மோதல்போக்கு இருந்து வந்தது. இந்த மோதல் போக்கின் உச்சமாக தனது முதல்வர் பதவியையே அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதன் பின்னர், புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக் கொண்டார்.

இதன் காரணமாக காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அம்ரீந்தர் சிங், புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில், அம்ரீந்தர் சிங் தனது புதிய கட்சி இன்று அறிவித்தார். ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற பெயரில் அம்ரீந்தர் சிங் தனது புதிய கட்சியை தொடங்கியுள்ளார். புதிய கட்சி தொடங்குவதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதற்கான ராஜினாமா கடிதத்தை அம்ரீந்தர் சிங் காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

புதிய கட்சி தொடங்கியுள்ள அமரீந்தர் சிங் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் 117 இடங்களிலும் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News