ஏர்டெல் நிறுவனத்தில்  அமேசான் 14 ஆயிரம் கோடி முதலீடு?!

ஏர்டெல் நிறுவனத்தில்  அமேசான் 14 ஆயிரம் கோடி முதலீடு?!

Update: 2020-06-05 20:12 GMT

ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு எடுத்துள்ளது.

இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் மூலம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வருகின்றன. இந்தியாவில் முன்னணித் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோவில் சமீபத்தில் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து வந்தன.

தற்போது, ஏர்டெல் நிறுவனமும், அமேசான் நிறுவனமும் புதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பேச்சுவார்த்தையில் உடன்பாடு  ஏற்பட்டால் அமேசான் நிறுவனம் 14,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் கைகோர்க்க தயாராகியுள்ளது. அந்த வகையில் அமேசான் ஏர்டெல் பேச்சுவார்த்தை உடன்பட்டால் ஏர்டெல் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை அமேசான் கைப்பற்ற  வாய்ப்புள்ளது.

newstm.in

Tags:    

Similar News