சிறுவர், சிறுமிகளுக்கு அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள்.. ஆந்திரா முதலிடம் !

சிறுவர், சிறுமிகளுக்கு அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள்.. ஆந்திரா முதலிடம் !

Update: 2022-01-06 07:30 GMT

இந்தியாவில் கொரோனாவும் ஒமைக்ரான் பாதிப்பும் திடீரென அதிகரித்து பரவி வருகிறது. இதனையொட்டி பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்- சிறுமியருக்கு கடந்த 3ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் அனைத்து மாநிலங்களும் தீவிரமாக தடுப்பூசி போட்டு வருகின்றன. நேற்று மாலை நிலவரப்படி 85 லட்சத்துக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் அதிக தடுப்பூசி போட்ட மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்து உள்ளது.

ஆந்திராவில் மொத்தமுள்ள 15-18 வயது பிரிவினரில் 39.8 சதவீதத்தினர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். அடுத்ததாக இமாசல பிரதேசம் 37 சதவீதம், குஜராத் 30.9  சதவீதம் செலுத்தி அடுத்தடுத்த இடங்களில் மாநிலங்கள் உள்ளன.

தாத்ரா-நாகர் ஹவேலி மற்றும் டையூ-டாமன் யூனியன் பிரதேசம் 28.3 சதவீதமும், கர்நாடகா 25.3 சதவீதமும், உத்தரகாண்ட் 22.5 சதவீதமும், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார் முறையே 20.6, 20.5 சதவீதமும் தடுப்பூசி போட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

newstm.in

Tags:    

Similar News