உயிருக்கு போராடும் பிரபல நடிகை - பிக்பாஸ் பிரபலத்தின் உருக்கமான பதிவு !!

உயிருக்கு போராடும் பிரபல நடிகை - பிக்பாஸ் பிரபலத்தின் உருக்கமான பதிவு !!

Update: 2021-02-18 16:45 GMT

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குணச்சித்திர நடிகை சிந்துவின் அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு பண உதவி தேவைப்படுவதாக நடிகை சனம் ஷெட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அங்காடி தெரு, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் சிந்து. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் சீரியல்களிலும் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு இவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.அதற்காக கடந்தாண்டு செப்டம்பரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். கொரோனா பொதுமுடக்கத்தில் திரைப்படங்களில் எதுவும் நடிக்காமல் வறுமையில் வாடினார். இதுதொடர்பான செய்தி வெளியான நிலையில், திரைத்துறையச் சேர்ந்த பலரும் அவருக்கு உதவி செய்தனர்.

மேலும் வீடியோ வெளியிட்ட அவர், சிகிச்சைக்காக உதவிய நடிகர் கார்த்தி, நகைச்சுவை நடிகர்கள் ரோபோ சங்கர், பிளாக் பாண்டி, சோனியா போஸ் வெங்கட், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வில்லன் நடிகர் டேனியல் உள்ளிட்டோருக்கு நடிகை சிந்து நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிக்பாஸ் பிரபலம் நடிகை சனம் ஷெட்டி, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சிந்துவுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதற்காக ரூ. 1.6 லட்சம் வரை செல்வாகும். நண்பர்கள் முடிந்தவரை உதவ வேண்டும் என கேட்டுக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.


நெட்டிசன்கள் பலரும் சிந்துவுக்கு உதவ, சனம் ஷெட்டியின் போஸ்ட்டை ஷேர் செய்து வருகின்றனர். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் இருந்து சிந்துவின் சிகிச்சைக்காக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 


 

Tags:    

Similar News