திருமணத்திற்கு முந்தைய இரவில் கோபம்.. வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன் !
திருமணத்திற்கு முந்தைய இரவில் கோபம்.. வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன் !
ஓடிசா மாநிலம் ஜஜ்பூரை சேர்ந்த ராமகாந்த் பத்ரா( 27) என்ற இளைஞருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பெற்றோர் ஏற்பாட்டில் திருமணம் நடைபெறவிருந்தது.
இதற்காக முந்தைய நாள் இரவு மணமகன் மற்றும் உறவினர்கள் அனைவரும் மணமகள் வீட்டிற்கு சென்றனர். அங்கு மணமகள் வீட்டார் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பின்னர் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் ஆட்டுக்கறி இடம் பெறவில்லை என மாப்பிள்ளை வீட்டில் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி வேறு ஒரு உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். பின்னர் ஆட்டுக்கறி போடவில்லை என்ற கோபத்தில் திருமணத்திற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் அதே இரவில் புல்ஜாராவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை ராமகாந்த் மணந்தார்.
இதனை அறிந்த மணமகள் வீட்டார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் இரவில் தாலிக்கட்டிய பெண்ணுடன் ராமகாந்த் பத்ரா இல்லற வாழ்க்கையை தொடங்கினார். முன்னதாக மணமுடிக்க இருந்த பெண் வீட்டார் தரப்பில் புகார் அளிக்கப்படவில்லை.
newstm.in