அமெரிக்காவில் அண்ணாத்த கொண்டாட்டம் ஆரம்பம்..!!
அமெரிக்காவில் அண்ணாத்த கொண்டாட்டம் ஆரம்பம்..!!
இன்று புதன்கிழமை அண்ணாத்த திரைப்படம் அமெரிக்காவில் வெளியாகிறது. இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவே 5 ஆயிரம் வாலா சரவெடியுடன் அதகளப்படுத்தி வரவேற்கத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் 21 ஆண்டுகளாக ரஜினி திரைப்படங்களின் வெளியீட்டை உற்சாகமாகக் கொண்டாடி வரும் ”தலைவர் ஃபேன்ஸ் யு.எஸ்.ஏ” சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனர் திறப்புவிழாவுக்கு ஏராளமான ரசிகர்கள் வருகை தந்து சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகளுடன், தேநீர் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 5 ஆயிரம் வாலா சரவெடியை வெடித்து அண்ணாத்த படத்தை வரவேற்று முழக்கமிட்டனர்.
அந்த வழியாகச் சென்ற அமெரிக்கர்கள் காரை நிறுத்தி இந்தக் கொண்டாட்டத்தை கண்டு களித்துள்ளனர். ஒரு திரைப்படத்திற்கு இந்த வரவேற்பா என்று கேட்டு, ரஜினிகாந்த் பற்றியும் கேட்டு அறிந்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். விழாவுக்கு வருகை தந்திருந்த அனைத்து ரசிகர்களுக்கும் டி-ஷர்ட்டுடன் குளிர்காலத்திற்கு ஏற்ற விண்டர் கோட்டும் வழங்கப்பட்டது.
இன்று மாலை 7 மணி அளவில் ரசிகர்கள் சிறப்புக் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்புக்காட்சிக்கு வருகை தரும் ரசிகர்களுக்கும் அண்ணாத்த டி-ஷர்ட் மற்றும் விண்டர் கோட் வழங்கினார்கள் .