#BREAKING இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்.. பி.வி. சிந்து அசத்தல் !!
#BREAKING இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்.. பி.வி. சிந்து அசத்தல் !!
நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையும் சர்வதேச தரவரிசையில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் லீக் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து அவர் காலிறுதி தகுதிக்கு தகுதிப்பெற்றார்.
காலிறுதியில் 5ஆவது வரிசையில் உள்ள ஜப்பானின் யமகுச்சியை அவர் எதிர்கொண்டார். எனினும் 21-13, 22-20 என்ற கணக்கிலும் அவரை எளிதில் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார் பி.வி. சிந்து.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரை இறுதியில் பி.வி.சிந்து, சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனா-திபெத் வீராங்கனையிடம் நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர். எனினும் அவருக்கு வெண்கலப்பதக்கத்துக்கான வாய்ப்பு இருந்தது.
இதற்கான போட்டியில் பி.வி.சிந்து இன்று மாலை 5 மணிக்கு சீனாவை சேர்ந்த ஹி பி ஜியாவ்வை எதிர்கொண்டார். இதில் அவர் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார்.
newstm.in