இந்தியாவிலிருந்து யாரும் எங்க நாட்டுக்கு வராதிங்க !!

இந்தியாவிலிருந்து யாரும் எங்க நாட்டுக்கு வராதிங்க !!

Update: 2021-05-06 12:38 GMT

இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை எதிர்பார்த்ததை விட மிகத்தீவிரமாக உள்ளது. எனினும் அதனை கட்டுப்படுத்த பல்வேறு வகைகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொற்று பரவி கிட்டதட்ட பல மாதங்கள் ஆகியுள்ள போதிலும் வைரசின் ருத்ரா தாண்டவம் அடங்கியபாடில்லை.

இந்தியாவுக்கு மருந்து, ஆக்சிஜன் அளித்து பல்வேறு நாடுகள் உதவிகரம் நீட்டி வருகிறது. அதேநேரத்தில் பரவி வரும் கொரோனா அச்சத்தால் பல்வேறு நாடுகள் இந்திய விமான சேவைக்கு தடை விதித்துள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளன.அந்த வகையில் ஆஸ்திரேலியாவும் விமான சேவைக்கு தடை விதித்துள்ளது. மே 4-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள், இந்த நடவடிக்கை உடனடியாக அமல்படுத்தப்படும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.எனினும், தடைக்காலம் எவ்வளவு நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்பது குறித்த தகவல்களை இலங்கை அரசு வெளியிடவில்லை.  
 

Tags:    

Similar News