ஹவுஸிங் லோன் கட்றீங்களா? புதிய வருமான வரியில் அதிரடி மாற்றங்கள்! உஷார்!! 

ஹவுஸிங் லோன் கட்றீங்களா? புதிய வருமான வரியில் அதிரடி மாற்றங்கள்! உஷார்!!

Update: 2020-02-04 01:31 GMT

தற்போது வழங்கப்பட்டு வரும் 100க்கும் மேலான வரி விலக்கு அம்சங்களை மத்திய அரசு குறைக்க திட்டமிட்டு இருக்கின்றது. அதன்படி புது வருமான வரி விதிப்பின் படி கீழ்கண்ட வரி விலக்கு அம்சங்கள் இனி இருக்காது. அதன்படி, வாடகைக்கு இருக்கின்ற சம்பளதாரர்கள் யாவரும் மாதாந்திர வாடகைக்கு வரி விலக்கு கோரலாம் என்கின்ற தற்போதைய நடைமுறை நீக்கப்படுகின்றது.

அதே போன்று, ஹவுஸிங் லோனில், வாங்கியிருக்கும் வீட்டில் குடியிருப்போர், இனி கட்டி வரும் வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு கோரப்பட்டு வந்தது இனி முழுவதுமாக நீக்கப்படுகின்றது.

நிரந்தர கழிவாக இருக்கின்ற ரூ.50 ஆயிரம் நீக்கப்படுகின்றது. மேலும், குடும்ப பென்ஷனுக்காக குறைக்கப்படுகின்ற ரூ.15,000க்கு இனி வரி விலக்கு கிடையாது. இது வரையில் இருந்து வந்த குழந்தைகளின் கல்விக் கட்டணம், 80சியில் வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் பிரீமியம், முதலீடுகளான இஎல்எஸ்எஸ், பிபிஎஃப் என்பிஎஸ், போன்றவற்றுக்கான வரிவிலக்கும் இனி இருக்காது.
 

newstm.in

Tags:    

Similar News