பிக்பாஸ் சீசன் 5-யில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவர்கள் தானா..? பரபரக்கும் லிஸ்ட் இதோ..!
பிக்பாஸ் சீசன் 5-யில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவர்கள் தானா..? பரபரக்கும் லிஸ்ட் இதோ..!
சென்னைக்கு அடுத்துள்ள இ.வி.பி ஃப்லிம் சிட்டியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான தயாரிப்பு பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருவதாகவும், போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் தயாரிப்புக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டது பிக்பாஸ் தான். இதுவரை நான்கு சீசன்கள் ஒளிப்பரப்பான நிலையில், புதிய சீசனுக்கான தயாரிப்புப் பணிகள் வேகமெடுத்துள்ளன.ஆனால் தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் முதல் நான்கு சீசன்களை தொகுத்து வழங்கி வந்த கமல், ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்குவாரா என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதற்கிடையில் புதிய சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகளை நிர்வாகக் குழு துவங்கியுள்ளது. அதன்படி, ரீரெட்டி, சோனா, ராதாரவி, பழகருப்பையா, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோருடைய பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களான அஸ்வின், பவிதா போன்றோரையும், கோமாளிகளான ஷிவாங்கி, புகழ் ஆகியோரையும் பிக்பாஸ் சீசன் 5-யில் பங்கேற்க வைக்க நிகழ்ச்சி தயாரிப்பு முழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகத நிலையில், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி குறித்து தெரியவரும் அறிவிப்புகள் பார்வையாளர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.