‘ஏரியாவில் கெத்து காட்டனும்’ - சபரிமலையிலிருந்து அரிவாள் வாங்கிவந்து நண்பனை கொன்ற கும்பல்

‘ஏரியாவில் கெத்து காட்டனும் ?’ - சபரிமலையிலிருந்து அரிவாள் வாங்கிவந்து நண்பனை கொலை செய்த கும்பல்

Update: 2020-01-18 18:03 GMT

காஞ்சிபுரம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் யுவராஜ் (28), தாமோதரன் (23), ஜெகநாதன் மற்றும் முத்துக்குமார். பெயிண்டர் வேலை செய்து வந்த இவர்கள் உள்ளூரில் பெயிண்டர் வேலைகளை பிடிப்பது, மற்ற கூலி வேலைகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பது போன்ற தொழிலும் செய்து வந்தனர். இதில் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதில் யுவராஜ் மற்ற மூன்று பேரையும் மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்துவந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இவர்களுக்குள் ஏற்கனவே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையை அடுத்த கோவூர் அருகே மூன்று பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளளனர்.

அப்போது யுவராஜை தொலைப்பேசி வாயிலாக மது அருந்த அழைத்துள்ளனர். நண்பர்கள் அழைத்ததால் வந்த யுவராஜை குடிக்க வைத்து, போதை ஏறிய பின்னர் அவரை மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெகநாதன் சரமாரியாக வெட்டியுள்ளார். அவரைத்தொடர்ந்து அப்பு மற்றும் முத்துக்குமாரும் அதே அரிவாளை வாங்கி யுவராஜை வெட்டியிருக்கின்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலை செய்த மூன்று பேரும் தலைமறைவாகினர். போகிப் பண்டிகை அன்று நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார், யுவராஜ் தொலைபேசிக்கு கடைசியாக வந்த அழைப்பை வைத்து அப்புவை கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜெகநாதன் மற்றும் முத்துக்குமாரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் மேற்கண்ட தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்திருக்கின்றனர். மேலும் முதலில் அரிவாளால் வெட்டிய ஜெகநாதன் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். அண்மையில் அங்கு சென்று ஜெகநாதன் மாலையை கழட்டிய பின்னர், அங்கேயே யுவராஜை கொல்வதற்கு அரிவாள் வாங்கிக்கொண்டு ஊர் திரும்பியதாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News