திடீரென கீழே விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டர்.. விமானிகள் உயிரிழப்பு !!
திடீரென கீழே விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டர்.. விமானிகள் உயிரிழப்பு !!
ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
ஜம்மு -காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஷிவ்கர் தார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது.
அதாவது, ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூரில் பத்னிதோப் பகுதியருகே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென கீழ் நோக்கி பறக்க தொடங்கியது. இதனை கவனித்த உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பின்பு அந்த ராணுவ ஹெலிகாப்டர் பத்னிதோப் என்ற இடத்தில் விபத்தில் சிக்கி தரையில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 2 விமானிகள் காயமடைந்து உள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு விமானிகளும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டரில் இரண்டு நபர்கள் இருந்ததாகவும், உதம்பூர் பகுதியில் கடும் மூடுபனி காரணமாக அப்பகுதியில் பார்வை குறைந்துள்ளதாகவும், இதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், மோசமான வானிலை காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதா அல்லது விமானி கவன குறைவு காரணமாக விபத்துக்குள்ளானதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் கூறினர்.
newstm.in