கலைஞர்.. பெர்சனல் பக்கங்கள்! கலைஞர் என்றால் இது தான்!
கலைஞர்.. பெர்சனல் பக்கங்கள்! கலைஞர் என்றால் இது தான்!
கலைஞர் என்றால் அன்பு... கலைஞர் என்றால் சுறுசுறுப்பு. கலைஞர் என்றால் எதிர்காலம். கலைஞர் என்றால் ஏழைகளின் நம்பிக்கை. தனது அரசியல் எதிரிகளையும், நாவண்மையால் ரசிக்க செய்தவர் கலைஞர்.
சுட்டெரிக்கும் வெயில் காலமாக இருந்தாலும் சரி, பனி காலமாக இருந்தாலும் சரி, வெதுவெதுப்பான தண்ணீரில் தான் குளிப்பார். வெயிலோ, கடுங்குளிரோ, மழையோ எந்த கால நிலையும் அவரை வீட்டிற்குள்ளேயே முடக்கி போட்டதில்லை. வெள்ளை நிறத்தில் ஆன தோல் செருப்பு அணிவது தான் அவருக்கு பிடிக்கும். நடைபயிற்சி செல்லும் போது மட்டும் 'கட் ஷூ' அணிவார். தன்னுடைய உயிருக்கும் மேலாக நேசித்த எழுத்துப்பணியை இரவிலேயே வைத்துக் கொள்வார். இரவில் எத்தனை மணிக்கு தூங்க சென்றாலும், அதிகாலை 5:30 மணிக்கு எழுந்து விடுவர்.
அண்ணா அறிவாலயம் கட்டிய பிறகு, அங்கு நடைபயிற்சி செல்ல ஆரம்பித்தார். உடல்நிலை நாராக யோருக்கும் வரை காலையில் அங்கு சென்று 20 நிமிடம் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். காலையிலேயே எல்லா தினசரி பத்திரிக்கைகளையும் படித்து முடித்துவிடுவார். அரசியல், உலக நடப்புகளை விரல் நுனியிலோ வைத்திருப்பார். அம்பாசிடர் காரில் பயணம் செய்வதையே விரும்புவார்.
கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும், தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை விரும்பி பார்ப்பார். இதேபோல் பழைய சினிமா படங்களையும் விரும்பி பார்பார். ஒரு நாளைக்கு இரு முறை ஆடைகளை மாற்றுவார். தேர்தல் சமயம் மற்றும் அதிகமான வெயில் சமயங்களில் வெளியே செல்லும் போது மூன்று முறை சட்டை மாற்றுவார். இரவில் லுங்கி அணிவார். இவருக்கு எப்போது ஆடைகள் தைத்து கொடுப்பது... கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தையல் காரர்தான். எப்போதும் மழையை ரசிப்பார். நாய்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அந்த நாய் இறந்த பிறகே அசைவ ப்ரியரான அவர் முழுமையாக சைவத்திற்கு மாறினார்.