கவச உடை அணிந்து மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்த அருண்ராஜா காமராஜா...!

கவச உடை அணிந்து மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்த அருண்ராஜா காமராஜா...!

Update: 2021-05-17 19:15 GMT

கொரோனா பாதிப்பால் மரணமடைந்த மனைவியின் உடலுக்கு கவச உடை அணிந்து இயக்குநர் அருண்ராஜா காமராஜா கண்ணீர்மல்க இறுதிச் சடங்கு செய்தது காண்போரை கண்கலங்க வைத்தது.

தமிழ் சினிமாவில் சமகாலத்தில் இருக்கும் நடிகர்களில் பன்முகத்தன்மையுடன் இருப்பவர் அருண்ராஜா காமராஜா. ராஜா ராணி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகங்களை கொண்டவர். மான்கராத்தே, ரெமோ, க பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மரகத நாணயம் திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர். பீட்சா, தெறி, காக்கி சட்டை, பென்சில், ஜிகர்தண்டா, கவண் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவர் எழுதி பாடிய கபாலி படத்தில் இடம் பெற்றிருந்த நெருப்புடா பாடல் இவரை பிரபலமடைய செய்தது.கோலமாவு கோகிலா படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண்ராஜா காமராஜ் ஐஷ்வர்யா ராஜேஷை வைத்து கனா என்ற திரைப்படத்தை இயக்கியவர். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஆர்டிகள் 15’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கும், அவருடைய மனைவி சிந்துஜாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இருவரும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டு இருந்தனர். சிந்துஜாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.இது திரைத்துறையில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்து போன சிந்துஜாவுக்கு வயது 38 தான் ஆகிறது.

கொரோனா பாதிப்பால் அவர் உயிரிழந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அருண்ராஜா காமராஜா கவச உடை அணிந்து வந்தார்.மனைவியின் உடலை பார்த்து கண்ணீர்விட்டு அவர் கதறியதை பார்த்த போது, அருகிலிருந்த பலரும் மனமுடைந்த அழுதனர். இந்த இறுதிச்சடங்கில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று அருண்ராஜா காமராஜாவுக்கு ஆறுதல் கூறினர்.

சமீப நாட்களாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில் தற்போது திரைத்துறை பிரபலம் ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழந்திருப்பது திரைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

Tags:    

Similar News