கோலிவுட்டில் சூர்யா தொடங்கிய டிரெண்டை மனைவிக்காக பின்பற்றும் ஆர்யா..!
கோலிவுட்டில் சூர்யா தொடங்கிய டிரெண்டை மனைவிக்காக பின்பற்றும் ஆர்யா..!
மனைவிக்கு ஏற்பட்டுள்ள ஆசையை நிறைவேற்றும் விதமாக நடிகர் ஆர்யா, மனைவி சாயிஷாவுக்காக ஒரு திரைப்படம் தயாரிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திர தம்பதிகளில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளவர்கள் ஆர்யா மற்றும் சாயிஷா. இவர்களுக்கு சீனியர்களாக இருக்கும் சூர்யா மற்றும் ஜோதிகா பாணியில் ஒரு செயல்பாட்டை துவங்கியுள்ளனர்.
அதன்படி கடைக்குட்டி சிங்கம், வனமகன், காப்பான், கஜினிகாந்த் உள்ளிட்ட கமர்ஷியல் படங்களில் நடித்து பிரபலமான சாயிஷா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த வகையில் ஆர்யாவுடன் டெடி படத்தில் நடித்துள்ள அவருக்கு நல்ல வலுவான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 16-ம் தேதி நேரடியாக ஓ.டி.டி பிளாட்பாரமில் வெளியிடப்படுகிறது. மேலும் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தயாராகி வரும் யுவரத்னா என்கீற படத்திலும் சாயிஷா நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள் அதிகளவில் வெளிவர துவங்கியுள்ளன. இந்த டிரெண்டிங்கில் நயன்தாரா, த்ரிஷா, ஜோதிகா போன்றோ உச்சம் தொட்டுவிட்டனர். தற்போது அதே பாணியை சாயிஷாவும் பின்பற்ற முடிவு செய்துள்ளார்.