ஆசிய பாரா பேட்மிண்டன்.. தங்கம் வென்று சாதித்த ஒசூர் சிறுமி.. குவியும் பாராட்டு.. அரசு உதவ கோரிக்கை !

ஆசிய பாரா பேட்மிண்டன்.. தங்கம் வென்று சாதித்த ஒசூர் சிறுமி.. குவியும் பாராட்டு.. அரசு உதவ கோரிக்கை !

Update: 2021-12-28 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாற்றுத்திறனாளி சிவன்-  சுமதி தம்பதியருக்கு நித்யஸ்ரீ என்ற மகளும், கிஷோர் என்ற மகனும் உள்ளனர். நித்யஸ்ரீக்கு ஒரு வயது இருக்குபோது அவரது தாயார் சுமதி உடல்நலக்குறைவு காலமானார். இதனால் இரண்டு குழந்தைகளையும் கவனிப்பதில் அவருக்கு சவால் ஏற்பட்டது. ஆண்டுகள் செல்ல செல்ல மகள் நித்யஸ்ரீயும் மகன் கிஷோரும் தன்னை போல் வளர்ச்சி இல்லாமல் இருந்தது உணர்ந்து தந்தை சிவன் அதிர்ச்சி அடைந்தார்.

எனினும் நித்யஸ்ரீக்கு இறகுப் பந்து விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். மகள் மீதான நம்பிக்கையால் அவள் சாதிப்பால் என அறிந்து மாற்றுத்திறனாளியான தந்தை சிவன், தனது மகளை அங்கு உள்ள பேட்மிண்டன் பயிற்சி மையத்தில் சேர்த்தார்.

 
அங்கு அவரது ஆட்டத்திறனைப் பார்த்து லக்னோவில் தேசிய அளவில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்தது. அதன்பலனாக 2019ஆம் ஆண்டு நாகர்கோவிலில் நடைப்பெற்ற பாரா பேட்மின்டன் போட்டியில் சிறுமி நித்யஸ்ரீ தங்கம் வென்று அசத்தினார். அவரின் தொடர் முயற்சியால் சமீபத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய பாரா பேட்மின்டன் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறுமி நித்யஸ்ரீ ஒற்றையர் பிரிவில் தங்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனால் அவரால் ஒட்டுமொத்த தமிழகமும் பெருமை அடைந்தது.
  
இதனிடையே, சாதனைக்கு உடல்குறைபாடு ஒரு தடை இல்லை என்பதை உணர்ந்ததாக நித்யஸ்ரீயின் தந்தை சிவன்.கூறுகிறார். நித்யஸ்ரீ தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என சிவன் கேட்டுக் கொண்டுள்ளார். சாதனைக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ள மாணவி நித்யஸ்ரீக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அவரது சாதனை வானளவு உயர தமிழக அரசு நிச்சயம் உதவிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்

newstm.in

Similar News