கோவில் வாசலில்... கஞ்சா விற்ற போலி சாமியார்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்: நடந்தது என்ன?
கோவில் வாசலில்... கஞ்சா விற்ற போலி சாமியார்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்: நடந்தது என்ன?
சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் பொதுமக்களிடம் குறி சொல்லிவந்துள்ளார். மேலும் சாமியார் தோற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு கஞ்சா வியாபாரமும் செய்து வந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலீசார் மாற்று வேடத்தில் கஞ்சா வாங்குவதுபோல் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் சேகர் சாமியார் வேடத்தைப் பயன்படுத்திக் கொண்டு கோவில்களில் தங்கி கஞ்சாக விற்றது தெரியவந்தது.
மேலும், இவர் சாமியார் தோற்றத்தில் இருந்ததால் யாருக்கும் சேகர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. மேலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி ஆகிய இரண்டு பேரும் கஞ்சாவை எடுத்து வந்து போலி சாமியார் சேகரிடம் கொடுத்து விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலி சாமியார் சேகர், ராஜா மற்றும் ஆசைதம்பியை ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.