அடேங்கப்பா!! செல்போனால கரப்பான்பூச்சிக்கும் பாதிப்பு!!
மொபைல் போன் கதிர்வீச்சால் கரப்பான்பூச்சிக்கும் பாதிப்பு!;
மொபைல் போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக் காரணமாக மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. செல்போன் டவர் வருகைக்குப் பிறகு சிட்டுக் குருவிகள் நகர்ப் பகுதியில் காணப்படுவது இல்லை. பல பறவை இனங்கள் அழியும் நிலையில் உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், செல்போன் கதிர்வீச்சுப் பூச்சி இனங்களையும் மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளதாகத் திருவனந்தபுரம் பல்கலைக் கழக விலங்கியல் துறை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மொபைல் போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக் காரணமாகக் கரப்பான்பூச்சியின் உடலில் பல என்சைம் மாற்றங்கள் நிகழுவதாகவும், ரத்த மூலக்கூறில் தாக்கம் தெரிவதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. தொடர்ந்து செல்போன் கதிர்வீச்சுக்கு ஆளாகும் கரப்பான் பூச்சியின் மூளை, ரத்தம், நரம்பு மண்டலம், செரிமான மண்டல செல்களில் பாதிப்பு ஏற்படவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கரப்பான்பூச்சிக்கே இந்த நிலை என்றால், மனிதர்களுக்கு மொபைல் போனால் ஏற்படக் கூடிய பாதிப்பை இன்னும் அதிகமாக இருக்கும். காளான்கள் போல மொபைல் போன் டவர் அதிகரித்துவிட்டது. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தனித்தனியே மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். எப்போதும் கையிலேயே... தூங்கும்போது தலைக்கு அருகில் செல்போன் இருக்கிறது. இதனால், மனிதர்களுக்குச் செல்போன் கதிர்வீச்சுக் காரணமாக அதிகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
newstm.in