குழந்தை சிகிச்சைக்காக ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்தை ஏலம்விட்ட வீராங்கனை.. பெரும் நெகிழ்ச்சி !!
குழந்தை சிகிச்சைக்காக ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்தை ஏலம்விட்ட வீராங்கனை.. பெரும் நெகிழ்ச்சி !!
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இதில் பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கம் பெற்றனர். அந்த வகையில், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் போலந்து நாட்டை சேர்ந்த 25 வயது வீராங்கனை மரியா ஆந்த்ரேஜிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதனால் அவர் மிகவும் கொண்டாடப்பட்டார். வீராங்கனை மரியாவுக்கு பலரும் வாழ்த்து கூறினார். ஆனால் தனது வெள்ளிப்பதக்கத்தை விற்பனை செய்து அவர் செய்த உதவி உலகளவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்து நாட்டை சேர்ந்த 8 மாத குழந்தையின் சிக்கலான அவசர இதய அறுவை சிகிச்சைக்கு நிதி இல்லாமல் ஒரு தம்பதி தவித்து வந்தனர். தங்கள் நிலை, குழந்தையின் சிகிச்சை குறித்து பேஸ்புக் மூலம் வேண்டுகோள் பண உதவி கேட்டனர்.
இதனை கண்டு வேதனை அடைந்த மரியா, தனது வாழ்நாள் கனவாக கைப்பற்றிய பதக்கத்தை ஆன் லைன் மூலம் தனது வெள்ளிப்பதக்கத்தை ஏலத்தில் விட்டார். அதனை அங்குள்ள ஒரு தனியார் நிறுவனம் ரூ.93 லட்சத்துக்கு எடுத்தது. அந்தப் பணத்தை அவர் அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் குழந்தையின் பெற்றோருக்கு அனுப்பி வைத்து வியக்க வைத்துள்ளார்.
அதேநேரம், பதக்கத்தை ஏலத்தில் வாங்கிய நிறுவனம் மரியாவின் பரந்த மனதை பாராட்டி இருப்பதுடன் அந்த பதக்கத்தை அவரிடமே திரும்ப வழங்க முடிவு செய்துள்ளது. குழந்தைக்கு உதவிய வீராங்கனையின் செயலுக்கு உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
newstm.in