கொரோனா காலத்திலும் கொடூரம்.. 25 பேரால் இளம்பெண் பலாத்காரம் ! பேஸ்புக் காதலன் கைது !

கொரோனா காலத்திலும் கொடூரம்.. 25 பேரால் இளம்பெண் பலாத்காரம் ! பேஸ்புக் காதலன் கைது !

Update: 2021-05-16 18:39 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் குருகிராமில் 22 வயது இளம்பெண்ணின் குடும்பம் வசித்து வருகிறது. அப்பெண் மட்டும் டெல்லியில் தனியாக தங்கியிருந்து வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். அவர் நாள்தோறும் பணிக்கு சென்றுவந்த பின்னர் மீதமிருக்கும் நேரத்தில் செல்போனில் செலவிட்டு வந்துள்ளார். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஹரியானாவைச் சேர்ந்த 23 வயதாகும் சாகர் என்பவருடன், ஃபேஸ்புக் மூலம் இளம்பெண்ணிற்கு அறிமுகம் ஏற்பட்டள்ளது. பேஸ்புக்கில் பழகி வந்த இருவரும் பின்னர் மொபைல் நம்மர்களை பரிமாறி பேசி வந்துள்ளார். தொடர்ந்து பேசி வந்த நிலையில், இளம்ப்பெண்ணிடம் காதலிப்பதாக சாகர் கூறியிருக்கிறார். இதனை அப்பெண் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேரில் பார்க்க வேண்டும் மலும் ‘தன்னுடைய பெற்றோரை அறிமுகம் செய்து வைப்பதாகவும் இளம்பெண்ணிடம் சாகர்  கூறியுள்ளார். அப்போது, திருமணம் குறித்தும் பேசலாம் என அப்பெண்ணிண்டம் கூறியிருக்கிறார்.

இதனை நம்பிய அப்பெண் கடந்த மே 3ஆம் தேதி ஹோதல் பகுதிக்கு சென்று தன்னுடைய காதலன் சாகரை சந்தித்திருக்கிறார் அந்த இளம்பெண். இருப்பினும் பெற்றோரை சந்திக்காமல் அருகில் உள்ள கிராமம் ஒன்றின் காட்டுப்பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்றிருக்கிறார். இருவரும் அங்கே மது அருந்தியதாகவும், உணவு உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர்  அவர் அப்பெண்ணுடன் உல்லாசகமாக இருந்ததாக தெரிகிறது. அவரை தொடர்ந்து சாகரின் சகோதரர் சமுந்தர் மற்றும் அவருடைய நண்பர்கள் அதே பகுதியில் கும்பலாக மது அருந்தியுள்ளனர். சாகர், அவருடைய சகோதரர், நண்பர்கள் அந்த இளம் பெண்ணை இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். 

மறு நாள் காலை பழைய இரும்பு வியாபாரம் பார்த்து வந்த ஆகாஷிடம் அந்த பெண் அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கும் 5 பேர் அவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். சாகர் உட்பட 25 பேர் அந்த இளம்ப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் பதர்பூர் அருகே அவரை வீசிச் சென்றுள்ளனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்தும் உடல் ரீதியாகவும் அந்த இளம் பெண் மீண்டு வர 9 நாட்கள் ஆகியுள்ளது. அதன்பின்னரே அப்பெண் ஹசன்பூர் காவல்நிலையத்திற்கு சென்று 25 பேர் மீதும் புகார் அளித்துள்ளார். புகாரை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் 25 பேர் மீதும் கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முக்கிய நபரான சாகரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருந்து வரும் பிறரை தேடி வருகின்றனர். கொரோனா நேரத்தில் டெல்லி அருகே நடைபெற்றுள்ள இந்த கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

newstm.in

Tags:    

Similar News