நிலத் தகராறில் கொடூரம்.. 2 சிறுவர்கள் கொலை.. கண்கள் தோண்டியெடுப்பு.. தாய்மாமனுக்கு போலீஸ் வலை..!

நிலத் தகராறில் கொடூரம்.. 2 சிறுவர்கள் கொலை.. கண்கள் தோண்டியெடுப்பு.. தாய்மாமனுக்கு போலீஸ் வலை..!

Update: 2022-01-29 16:00 GMT

நிலத்தகராறு காரணமாக இரண்டு சிறுவர்களை கொடூரமாக கொலை செய்து, அவர்களின் கண்களை தோண்டி எடுத்த தாய்மாமனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அம்பாதிக் கிராமத்தில் வசிப்பவர் பிரேம் மராண்டி. இவருக்கு மர்ஷிலா 10 என்ற மகளும், பாபுலால் (8) என்ற மகனும் உள்ளனர். இவரது மைத்துனரும், குழந்தைகளின் தாய் மாமனுமான நேரு மராண்டிக்கு பிரேமுடன் நிலத்தகராறு இருந்தது.

இந்த தகராறில் பிரேம் மீது ஆத்திரம் அடைந்த நேரு மராண்டி, சிறுவர்களான மர்ஷிலா மற்றும் பாபுலால் இருவரையும் நேற்று முன்தினம் மாலையில் வயலுக்கு அழைத்துச் சென்று கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். அத்துடன், இருவரின் கண்களையும் தோண்டி எடுத்துள்ளார். குழந்தைகளின் சடலங்கள் நேற்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுகுறித்து பகூர் மாவட்ட எஸ்பி ஜனார்த்தனன் கூறுகையில், “குழந்தைகளைக் கொன்றுவிட்டு தலைமறைவாக உள்ள நேரு மராண்டியை தீவிரமாக தேடி வருகிறோம்.

அவருடைய தந்தை பிரதான் மராண்டி, தாய் புதி ஹன்ஸ்தா, சகோதரன் குமஸ்தா மராண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

Similar News