சென்னை மக்களே கவனம்.. ஒரே தெருவில் 10 பேர்.. மீண்டும் அதிகரிக்குது தொற்று..!
சென்னை மக்களே கவனம்.. ஒரே தெருவில் 10 பேர்.. மீண்டும் அதிகரிக்குது தொற்று..!
சென்னையில் ஒரே தெருவில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அசோக் நகர் 19வது தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அடுத்தடுத்து மேலும் சிலருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து அந்தத் தெருவில் 83 பேருக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. அதில், அந்த தெருவில் மட்டும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது, இதனால் அந்த தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
நுழைவாயிலில் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. அந்த பகுதி முழுவதும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.