கவர்ச்சிகரமான சியோமி Mi 11 அல்ட்ரா, 11 புரோ.. வெளியான சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது !

கவர்ச்சிகரமான சியோமி Mi 11 அல்ட்ரா, 11 புரோ.. வெளியான சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது !

Update: 2021-04-03 07:15 GMT

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் உலகளவில் முன்னணியில் இருக்கின்ற நிறுவனங்களில் ஒன்று சியோமி நிறுவனம். இந்த நிறுவனம் Mi என்ற படைப்புகளில் செல்போன்களை வெளியிட்டு வருகிறது. தற்போது பல நாடுகளில் இந்நிறுவனத்தின் செல்போன்கள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.

இந்த சூழலில் Mi 11 அல்ட்ரா மற்றும் 11 புரோ என இரண்டு மாடல்களை அந்நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளாது. விற்பனைக்கு வந்த சில நொடிகளில் விற்று தீர்ந்துள்ளன இந்த இரண்டு மாடல் போன்களும். அதன் மூலம் சுமார் 1.2 பில்லியன் சீன நாட்டு கரண்சியை ஈட்டியுள்ளது அந்நிறுவனம். 

 இரண்டு போன்களும் ஸ்நேப்டிரெகன் 888 சிப்செட், 6.81 இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளே, 5000 mAH பேட்டரி, 67 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன் வெளி வந்துள்ளது. கூடுதலாக Mi 11 அல்ட்ராவில் 48 மெகா பிக்ஸல் மற்றும் ரியர் சைடில் சிறிய அளவிலான செகன்டரி டிஸ்பிளேவும் இதில் உள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன்கள் இந்த மாதத்தின் பிற்பாதியின் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது. அப்போது அதன் விலை மதிப்பு தெரியவரும் எனவும் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 70,000 என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்போதைக்கு இந்த போன் சீனாவில் அறிமுகமாகி உள்ளது.


newstm.in
 

Tags:    

Similar News