ஆக்சிஜன் வாங்க ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ ரூ.41 லட்சம் நிதியுதவி..!
ஆக்சிஜன் வாங்க ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ ரூ.41 லட்சம் நிதியுதவி..!
இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை சூறாவளியாக அடித்து வருகிறது. இதில் பொதுமக்கள் கொத்துகொத்தாக சிக்கி தவித்து வருகின்றனர். எனினும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் யாரும் இதில் இருந்து தப்பவில்லை. இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெரியளவில் நிலவுகிறது.
இதனால் நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். பல மருத்துவமனைகளில் அவரச உதவிக்கு ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வரும் துயரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இந்நிலையில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஆக்சிஜன் வாங்கி சப்ளை செய்வதற்காக, 50 ஆயிரம் அமெரிக்கா டாலர் (இந்திய பண மதிப்பில் ரூ. 37,36,590.00) பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நேற்று நன்கொடையாக வழங்கியுள்ளார்.
Well done @patcummins30 🙏🏻 pic.twitter.com/iCeU6933Kp
— Brett Lee (@BrettLee_58) April 27, 2021
மேலும், ஐபிஎல் போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களையும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வலியுறுத்தியுள்ளார். இன்று மற்றுமொரு ஆஸ்திரேலிய வீரர் உதவி கரம் நீட்டியுள்ளார். கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் வாங்க ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ ரூ.41 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் அவர், இந்தியாவை 2வது தாய் நாடாக கருதுவதாகவும், ஓய்வுக்கு முன்னும் ஓய்வுக்கு பின்னும் இந்தியர்கள் என் மீது அதீத அன்பு காட்டினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்திய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது என்றும் விரைவில் இந்தியா மீண்டு வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
newstm.in