ஆட்டோ ஓட்டுநர் மகள் மிஸ் இந்தியா ரன்னர் அப்! அரசியலுக்கு பிறகான கண்ணீர் கதை!

ஆட்டோ ஓட்டுநர் மகள் மிஸ் இந்தியா ரன்னர் அப்! அரசியலுக்கு பிறகான கண்ணீர் கதை!

Update: 2021-02-18 19:03 GMT

மான்யா சிங்  உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். வி.எல்.சி.சி பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2020 போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தாலும் மான்யாவிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. ஃபெமினா மிஸ் இந்தியா 2020-ம் ஆண்டுக்கான அழகி போட்டியில் ரன்னர்-அப் பட்டத்தை வென்றவர். ஆட்டோ ஓட்டுநரின் மகளான இவர் மிஸ் இந்தியா ரன்னர்-அப் பட்டத்தை வென்ற கதையை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.


தனது 14வது வயதில், தாங்கள் வசித்து வந்த கிராமத்தில் இருந்து மும்பைக்கு வந்துள்ளார் மான்யா. இதுதான் செய்யப்போகிறோம் என்ற திட்டம் எதுவுமே இல்லாமல் ரயிலில் ஏறிய மான்யாவிற்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. ரயிலில் வந்து இறங்கியதும் அவரது கண்ணில் பட்டது, ஒரு பீட்ஸா ஹட்.


அங்கேயே வேலைக்கு சேர்ந்துவிட்டார். மும்பைக்கு வந்த இரண்டாவது நாளில் தன் அப்பாவிடம் ‘நான் இங்கேதான் இருக்கிறேன்’ என்று கூறியதும் அவரின் குரல் கேட்டு அழுத தந்தையும், குடும்பத்துடன் மும்பைக்கே வந்துவிட்டார். மான்யாவின் அப்பா ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்துள்ள நிலையில், 14 வயதான சிறுமி மான்யா வேலைக்குச் சென்றார்.


தன் மகள் நன்றாகப் படிக்க மான்யாவை நல்ல பள்ளியில் சேர்த்தார் அவரது தந்தை. இவர் தமது 15வது வயதில் முதன்முதலில் பார்த்த மிஸ் இந்தியா புரோகிராம் அவரை அழகிப் போட்டிக்குள் வரவைத்தது என்கிறார். பள்ளிப்படிப்பு சம்பந்தமான வேலைகளை பகல் நேரத்திலேயே முடிக்கும் மான்யா, மாலை பொழுதிலும் இரவு நேரத்திலும் வேலைக்குச் சென்று மாதம் 15,000 ரூபாய் சம்பாதித்து வந்துள்ளார் மான்யா.


மான்யா ஆடிஷன் சென்றபோது பலரும் இவரிடம், ‘உனக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லை’ என்று கூறி மறுத்திருக்கிறார்கள். மற்ற மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும்போது அதனை உன்னிப்பாக கவனித்ததுடன் பீட்ஸா ஹட்டிற்கு வாடிக்கையாளர்களை பார்த்தே தமது ஆடைகளை வடிவமைத்துக் கொண்டாராம்.


‘ தேர்வுகளுக்காகவும், போக்குவரத்துக்காகவும், வீட்டிலிருந்த கொஞ்ச நகைகளையும் அடமானம் வைத்துள்ளார். ‘கல்வி ஒரு வலுவான ஆயுதம், எந்த நிலையிலும் அது கைகொடுக்கும். நீங்கள் ஈடுபாட்டுடன் உழைத்தால் அனைத்தும் சாத்தியமாகும் என உலகிற்கு காட்டவே நான் பெமினா மிஸ் இந்தியா 2020 போட்டியில் கலந்துகொண்டு தேர்வாக இருக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார் மான்யா.

போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த பின் வீடு திரும்பியதும் அவர் தன் தந்தையின் ஆட்டோவில் தான் குடும்பத்துடன் விழாவிற்கு வந்தார். அப்போது விழாவில், குனிந்து தன் தாயின் கால்களை தொட்டு மரியாதை செலுத்தினார். தந்தை உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியபோது அவர் கண்ணீரைத் துடைத்ததோடு மட்டுமல்லாமல், தனது கிரீடத்தை தன் தாய், தந்தைக்கு சூட்டி அழகு பார்த்தார்.

இக்கட்டான சூழ்நிலை வளர்ந்தாலும், வாழ்ந்தாலும் தனது லட்சிய பாதையை நோக்கி வெற்றி கண்ட மான்யாவிற்கு பாராட்டுக்களும், வாழ்த்து செய்திகளும் குவிந்து வருகின்றன.

Tags:    

Similar News