ஆட்டோகிராப் பட புகழ்... பிரபல பாடகர் கோமகன் கொரோனாவால் பலி !
ஆட்டோகிராப் பட புகழ்... பிரபல பாடகர் கோமகன் கொரோனாவால் பலி !
பிரபல பாடகரும், மேடை இசைக்கலைஞருமான கோமகன் கொரோனாவால் உயிரிழந்தார்.
உலகம் முழுவரும் பரவி பெரும் சேதத்தையும் உயிர்பலியையும் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. நாள்தோறும் புதிய உச்சமாக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
அதேநேரத்தில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், கே.வி.ஆனந்த், தாமிரா, தயாரிப்பாளர் பாபுராஜா உள்பட பலரும் கொரோனாவுக்கு பலியாகி இருக்கும் நிலையில் தற்போது பாடகர் கோமகன் கொரோனாவால் உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர வைத்திருக்கிறது.
கண்பார்வை அற்ற மாற்றுத்திறனாளியான கோமகன், சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படத்தில், ஒவ்வொரு பூக்களுமே பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் .
இந்நிலையில், கோமகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
’’மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்’’
’’உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்’’.. என தன்னம்பிக்கை ஊட்டும் அப்பாடலில் மேலும் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக பாடி நடித்திருந்தார் கோமகன். இசைப்பள்ளி நடத்தி வந்த கோமகன், 2019ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in