வாட்ஸ் அப்பில் அட்டகாசமான புதிய அப்டேட்!!

வாட்ஸ் அப்பில் அட்டகாசமான புதிய அப்டேட்!!

Update: 2021-12-21 09:31 GMT

உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புது புது அப்டேட்களை வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் செயலியில் நாம் வைக்கும் புரொபைல் போட்டோ, ஸ்டேட்டஸ், மற்றும் இதர விவரங்களை நமக்கு முன்பின் தெரியாத நபர்கள் பார்க்க முடியாதபடி செய்வதற்காக சில அப்டேட்களை தரவுள்ளது.

இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி 'வாட்ஸ்ஆப் டெஸ்க்டாப் பீட்டா வெர்ஷன் 2.2149.1-வில் யார் நமது புரொபைல் போட்டோ மற்றும் ஸ்டேட்டஸ் போன்றவற்றை பார்க்க வேண்டும் என்பதை நமக்கு ஏற்றவாறு வைத்துக்கொள்ள 'My Contacts Except...' என்கிற ஆப்ஷன் வரவுள்ளது.

இந்த புதிய அப்டேட் மூலம் நீங்கள் எப்போது கடைசியாக வாட்ஸ்ஆப்-இல் வந்தீர்கள், உங்களை பற்றிய தகவல்கள் மற்றும் புரொபைல் போட்டோ ஆகியவற்றை உங்களின் மொபைல் கான்டாக்ட்டில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கும்படி செய்ய 'My Contacts Except...' என்கிற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.

இதனால் உங்களின் தகவல்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். பாதுகாப்பு ரீதியாக கடந்த சில ஆண்டுகளாக வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எல்லா தகவல்களும் மிக பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstm.in

 

 

Similar News