பரிதாபம்.. கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு பல மாதங்களாக சுற்றும் நபர் ! பதறவைக்கும் வீடியோ !!
பரிதாபம்.. கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு பல மாதங்களாக சுற்றும் நபர் ! பதறவைக்கும் வீடியோ !!
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் (Jabalpur ) நகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள பத்ராஜி கிராமம். இங்கு சில காலமாக சுமார் 40 வயதான நபர் ஒருவர் கைகளும் கால்களும் ஒன்றாகக் சங்கிலி கட்டப்பட்டு வீதிகளில் சுற்றிவரும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. கடுமையான கோடை, குளிர் காலமாக இருந்தாலும் அவர் கிழிந்த சட்டையையும் கிழிந்த அரை பேண்டையும் அணிந்துள்ளார்.
பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் அவரை மீட்கவும் அல்லது அரசு காப்பகத்தில் ஒப்படைக்கவும் அப்பகுதி மக்களுக்கு தோன்றவில்லையா என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அவரது புகைப்படங்கள் வெளியான நிலையில் அவர் குறித்த தகவல் வெளிவந்தது. 40 வயதான ராஜாராம் சக்கரவர்த்தி என்பதும் மனநலம் பாதித்து சில மாதங்களாகவே இப்படி சுற்றிவருவதும் தெரியவந்தது.
ராஜாராமின் தாய், தந்தை சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தனர். அதன்பின்னர் அவரது மனைவி அவரை கவனித்துக்கொள்கிறார்கள். ஆயினும் அவர் தனது பெற்றோரை இழந்ததால், அவருக்குத் தேவையான அளவுக்கு யாரும் அவரிடம் கவனம் செலுத்துவதில்லை. அவர் நீண்ட காலமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். அவர் மற்றவர்கள் மீது கற்களை வீசி வாகனங்களின் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கிறார் எனவும் கூறுகின்றனர்.
இந்த காரணத்திற்காக, அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது கைகளையும் கால்களையும் கட்டினர் என கூறப்படுகிறது. தற்போது அவரது புகைப்படங்கள் வைரலான நிலையில் அவரை அரசு காப்பகத்தில் சேர்க்க தன்னார்வலர்கள் முயற்சி எடுத்த வருகின்றனர்.
Madhya Pradesh: A mentally challenged man roams around Badhraji village, 40 km from Jabalpur city. His hands and feet are roped together. Nobody knows who has tied up his legs and hands and for how long he has been roaming around the village. pic.twitter.com/cKlYMvO3dV
— Free Press Journal (@fpjindia) July 29, 2021
newstm.in