தாய் செய்த தவறுக்கு பச்சிளம் குழந்தை கொலை.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம் !!
தாய் செய்த தவறுக்கு பச்சிளம் குழந்தை கொலை.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம் !!
தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆம் தேதி அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மேற்கத்திய வடிவ கழிப்பறை இணைப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் பச்சிளம் குழந்தை உடல் கிடந்துள்ளது. இதனை பார்த்த மருத்துவமனை ஊழியர் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசு தொப்புள் கொடியுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது.
தகவலின் அடிப்படையில் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.
மேலும் குழந்தையை கழிவறையில் போட்டது யார்? அல்லது கழிவறையில் பிரசவம் நடந்து குழந்தையை விட்டு சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். மேலும் சிசிடிவி கண்காணிப்பு கேமாராவில் ஒரு பெண் மற்றும் சந்தேக்கிக்கும் முறையில் சுமார் 30 நிமிடங்கள் கழிவறையில் இருந்துள்ளார். இதன் அடிப்படையில் அப்பெண் யார் எனவும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அப்பெண் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே ஆலங்குடி பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி(24) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் பிரியதர்ஷினியை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளிவந்தன.
அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அப்பெண்ணிற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என்றும், தவறான உறவால் கர்ப்பமான பிரியதர்ஷினி நிறை மாதத்துடன் மருத்துவ கல்லூரி மருத்துலமனை வளாகத்தில் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் பிரசவ வலி வந்த உடன், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையில் குழந்தையை பெற்று, மேற்கத்திய வடிவ கழிப்பறை இணைப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இச்சம்பவத்திற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் அவர்களையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
newstm.in