டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் பி.வி. சிந்து.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 2016ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை பி.வி. சிந்து படைத்துள்ளார்.

இந்தநிலையில், இன்று பி.வி.சிந்து பதக்கத்துடன் தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோர் படைசூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹி பிங் ஜியாவை 21-13, 21-15 என்ற செட்களில் வீழ்த்தினாா். 

அப்போது பேசிய பி.வி.சிந்து, நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். என்னை ஆதரித்து ஊக்குவித்த பேட்மிண்டன் சங்கம் உட்பட அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். இது மகிழ்ச்சியான தருணம் எனத் தெரிவித்தார்.
 


newstm.in

Tags: