சாதனை படைத்த பேட்மிண்டன் வீரர் நந்து மரணம் ! ரசிகர்கள் அதிர்ச்சி !!

சாதனை படைத்த பேட்மிண்டன் வீரர் நந்து மரணம் ! ரசிகர்கள் அதிர்ச்சி !!

Update: 2021-07-30 08:09 GMT

இந்திய பேட்மிண்டன் முன்னாள் வீரரான நந்து நடேகர் (88) மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது முதிர்வால் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் தனது வீட்டில் நேற்று மரணம் அடைந்தார்.


மலேசியாவில் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற சேலஞ்சர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வாகை சூடிய முதல் இந்தியர் என்ற சாதனையை நந்து நடேகர் படைத்தார். மேலும் 100க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். இந்த நிலைல் அவரது மறைவு விளையாட்டுத்துறைக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நந்து நடேகர் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குர், இந்திய பேட்மிண்டன் சங்கம் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Tags:    

Similar News