அன்புமணி ராமதாஸுக்கு பிடிவாரண்ட்! கறார் காட்டிய நீதிமன்றம்!

அன்புமணி ராமதாஸுக்கு பிடிவாரண்ட்! கறார் காட்டிய நீதிமன்றம்!

Update: 2021-04-20 11:35 GMT

 

மரக்காணம் கலவர வழக்கில் ஆஜராகாத அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் சித்திரை விழா மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற வன்னியர் சங்கத்தினருக்கும், மரக்காணம் காலனி மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. 

ஆத்திரமடைந்த வன்னியர் சங்கத்தினர், கட்டையன் தெருவில் புகுந்து, குடிசை வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, சூறையாடினர். இதனையடுத்து, மரக்காணம் காலனி தரப்பைச் சேர்ந்தவர்கள், கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர். இருதரப்பினரும், கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். 

ஒரு கும்பல், அந்த வழியாக வந்த அரசு பஸ்களிலிருந்து, பயணிகளை மிரட்டி இறக்கி, தீ வைத்து கொளுத்தியது. 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் விழுப்புரம் எஸ்பி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர்.

கலவரத்தில், கட்டையான் தெரு தலித் குடியிருப்பில் எட்டு குடிசை வீடுகள் தீக்கிரையானது. இரண்டு பேர் உயிரிழந்தனர். கலவரம் தொடர்பாக 1500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்தவகையில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு 6 பேரும் ஆஜராகாததை அடுத்து அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

6 பேரையும் மே 15 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த செங்கல்பட்டு போலீசுக்கு குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News