திருமலை ஏழுமலையானை தரிசிக்க புது திட்டம் - "பாலாஜி தர்ஷன்" அமல் !!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க புது திட்டம் - "பாலாஜி தர்ஷன்" அமல் !!

Update: 2021-02-17 18:44 GMT

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் படிப்படியாக தளர்வுகளும் பரவலுக்கு ஏற்ப மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றுவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் பால்வேறு வசதிகளை செய்து வருகிறது. மேலும் ஆந்திர அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. ஏற்கெனவே பேருந்து மூலமாக ஏழுமலையானை தரிசிக்கவும், ரயில் மூலம் பயணிகளை ஒருங்கிணைக்கவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது "பாலாஜி தர்ஷன்" என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் டெல்லி - திருப்பதி இரு மார்க்கத்திலும் விமானக் கட்டணங்கள், தங்கும் விடுதி வசதி, உணவு, திருமலை, திருச்சானூர், காளஹஸ்தி கோயில்களை தரிசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பக்தர் ஒருவருக்கு ரூ.16, 535 கட்டணமாக வசூலிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News