கூட்ட நெரிசலில் சிக்கிய ரம்யா பாண்டியனுக்கு பவுன்சராக மாறிய பாலாஜி- வீடியோ உள்ளே..!

கூட்ட நெரிசலில் சிக்கிய ரம்யா பாண்டியனுக்கு பவுன்சராக மாறிய பாலாஜி- வீடியோ உள்ளே..!

Update: 2021-02-27 21:17 GMT

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது ரசிகர்களின் அன்பு மழையில் சிக்கிய ரம்யா பாண்டியனை பாதுகாப்பாக அழைத்துச் சென்று நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுதல்களை பெற்று வருகிறார் பாலாஜி.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. மொத்தம் 105 நாட்கள் இந்த நிகழ்ச்சியில், இறுதிநாள் வரை தனி பெண்ணாக இருந்து தில்லாக விளையாடியவர் ரம்யா பாண்டியன்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவருக்கு தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க அவர் கமிட் செய்யப்பட்டுள்ளார். தவிர, பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் பங்கேற்க ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி முருகதாஸுக்கு வந்திருந்தனர். அப்போது, அவர்கள் இருவரையும் காண்பதற்கு ரசிகர்கள் அதிகளவில் திரண்டுவிட்டனர். இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நெரிசலில் ரம்யா பாண்டியன் நடப்பது மிகவும் கடினமாகிவிட்டது.

அவருக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை புரிந்துகொண்ட பாலாஜி, உடனடியாக ரம்யாவை பாதுகாப்பாக பிடித்தார். தோளோடு தோளில் சாய்த்தபடி அவரை கூட்டத்தில் சிக்காமல் பார்த்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி இருவரும் நட்பு பாராட்டி வந்தாலும், இருவருக்குள்ளும் பகைமையும் உள்ளூர இருந்தது. தற்போது நிகழ்ச்சி முடிந்துவிட்டதால், இருவரும் நண்பர்களாக மாறிவிட்டார்கள் என நெட்டிசன்கள் கமெண்டு செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News