காதலியை பழிவாங்க பலே திட்டம்!! முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..
காதலியை பழிவாங்க பலே திட்டம்!! முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..;
உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலியைச் சேர்ந்தவர் சரோஜ் குமார்(28). இவர், அருகில் உள்ள சலோன் பகுதியைக் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்ட நிலையில் அந்தப் பெண்ணுக்கு வழக்கறிஞர் ஒருவருடன் அடுத்த வாரம் திருமணம் நடைபெறவுள்ளது.
அதன்பிறகு அந்தப் பெண் வசிக்கும் பகுதியில் அந்தப் போஸ்டர்களை சரோஜ் குமார் ஒட்டியுள்ளார். இதனைப் பார்த்த பெண் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்ததுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சரோஜ் குமார் மேல் வழக்கு பதிவு செய்து, பிரதாப்கர் என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் மறைந்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த சரோஜ் குமார் ஒட்டிய போஸ்டர்கள் நீக்கப்பட்டு, அவரிடம் முறையான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறி உள்ளனர்.
newstm.in