தடை நீக்கம்.. ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

தடை நீக்கம்.. ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

Update: 2021-11-20 20:30 GMT

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

அந்த வகையில், கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பம்பை ஆற்றில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல பத்தனம் திட்டா மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்நிலையில், பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்ததை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியுள்ளது. இதையடுத்து, ஆன்லைன் மூலம் அனுமதி பெற்றிருந்த பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News