இந்தியா செல்ல தடை! அமெரிக்கா எச்சரிக்கை!

இந்தியா செல்ல தடை! அமெரிக்கா எச்சரிக்கை!

Update: 2021-04-20 11:44 GMT

 

கொரோனா அதிகரித்து வருவதால் அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா நோய் பரவலில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதல் இடத்தில் இருந்தாலும், நோய் பரவல் வேகம் இந்தியாவில் தான் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தினசரி பாதிப்பு எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு 2.70 லட்சமாக பதிவாகி வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது. 20,31,977 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,31,08,582 இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதனால் மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.  
பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட கட்டுப்பாட்டுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. தடுப்பூசி போட்டிருந்தாலும் பயணம் செய்வது அபாயத்தை ஏற்படுத்தும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

Tags:    

Similar News