வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த வங்கி!!

வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த வங்கி!!

Update: 2022-01-22 17:33 GMT

வங்கிச் சேவைகளுக்கான கட்டணத்தை வங்கி நிர்வாகம் உயர்த்தியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸை முறையாக இல்லாமல் இருந்தால் அதற்கான கட்டணம் கிராமப்புற பகுதிகளுக்கு ஒரு காலாண்டுக்கு 200 ரூபாயில் இருந்து ரூ. 400 உயர்த்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களை பொறுத்தவரை கட்டணம் ஒரு காலாண்டுக்கு 300 ரூபாயில் இருந்து ரூ 600 உயர்த்தப்பட்டுள்ளது.

மெட்ரோ நகரங்களில் வங்கிக் கணக்கின் காலாண்டு சராசரி மினிமம் பேலன்ஸ் தொகை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இதுவும் வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி செய்தியாக மாறியுள்ளது.

அதே போல் பணப்பரிவர்த்தனையை பொறுத்த வரையில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 3 இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதன்பிறகு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஆறுதல் தகவல் என்னவென்றால் இது மட்டும் மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கு பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

லாக்கருக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புறங்களில் லாக்கர் கட்டணம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.இந்த  எல்லா கட்டண உயர்வும் ஜனவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

newstm.in

Similar News