ஏப்ரல் 20 வரை தடை! களையிழந்த சுற்றுலா துறை!

ஏப்ரல் 20 வரை தடை! களையிழந்த சுற்றுலா துறை!

Update: 2021-04-09 16:32 GMT

உலக நாடுகள் அனைத்தும் இன்னும்  கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கின்றன. சில நாடுகள் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியிருந்த போதிலும் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  அதன்படி  தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவிலும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. கம்போடியாவில் உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத்தளத்தை பார்வையிட உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா  பயணிகள் வந்து வழிபாடுவார்கள். 

தற்போது கம்போடியாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால்  அங்கோர்வாட் ஆலயத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கும் இந்த தடை பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது. ஏப்ரல்  20ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என  கம்போடியா  தெரிவித்துள்ளது.
 

Tags:    

Similar News