தனது குளியல் ஆபாச புகைப்படத்தை நெருங்கிய தோழிக்கு அனுப்பிய இளம்பெண்... விபரீதத்தில் முடிந்த செயல் !

தனது குளியல் ஆபாச புகைப்படத்தை நெருங்கிய தோழிக்கு அனுப்பிய இளம்பெண்... விபரீதத்தில் முடிந்த செயல் !

Update: 2022-01-06 09:49 GMT

நெருங்கி பழகிய தோழிக்கு தன் தனது ஆபாசமான புகைப்படத்தை அனுப்பிய இளம்பெண் செயல் பெரும் விபரீதத்தில் முடிந்தது.
 
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளம்பெண் சுவீட்டியுடன் நெருகிய நட்புடன் இருந்துள்ளார். அவர் மீது அதிக நம்பிக்கையும் வைத்து வந்துள்ளார். இந்த நிலையில், 23 வயது இளம்பெண் தான் குளிப்பதை ஆர்வமிகுதியில் செல்போனில் படம் பிடித்துள்ளார். 

அதோடுமட்டுமல்லாமல் தனது தோழி சுவீட்டிக்கு தான் குளித்தப்போது எடுத்த புகைப்படத்தை அனுப்பினார். அவர் தனது குளியல் புகைப்படத்தை வேறு யாருக்கும் பகிரமாட்டார் என்று நம்பிக்கையில் ஆர்வமிகுதியில் இதனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் தோழி சுவீட்டியோ தோழியின் குளியல் புகைப்படத்தை தனது ஆண் நண்பரான ஜாக்சன் என்பவருக்கு பகிர்ந்துள்ளார். அந்த வகையில் ஆபாச புகைப்படம் மேலும் சிலருக்கு பரவியதாக கூறப்படுகிறது.

அந்த படத்தை வைத்துக் கொண்டு மிரட்டி ஜாக்சன், 23 வயது இளம்பெண்ணுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பாலியல் தொல்லையால் மனஉளைச்சல் அடைந்த இளம்பெண் ஒரு கட்டத்தில் இதுபற்றி கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சுவீட்டி, ஜாக்சன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபோன்ற விபரீத விளையாட்டில் பெண்கள் ஈடுபடக்கூடாது என்றும், ஆண் நண்பராக இருந்தாலும் பெண் தோழியாக இருந்தாலும் தனது ஆபச புகைப்படங்களை பகிர்வது எந்த காலத்தக்கும் ஆபத்துதான் எனவும் போலீசார் எச்சரிக்கின்றனர்.

newstm.in

Similar News