போர்க்களமான ஜெயில் - சின்ன விஷயத்துக்கு சண்டை!

மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு வாரம் ஒரு முறை திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம். கடந்த சில வாரங்களாக அங்கு புதுப்படங்கள் திரையிடப்படாமல் பழைய படங்களே திரையிடப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.;

Update: 2020-03-10 21:54 GMT

மதுரையில் உள்ள சிறுவர்கள் ஜெயிலில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் காயமடைந்தனர். 


மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு வாரம் ஒரு முறை திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம். கடந்த சில வாரங்களாக அங்கு புதுப்படங்கள் திரையிடப்படாமல் பழைய படங்களே திரையிடப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 


இதனால் அங்கு அடைக்கப்பட்டுள்ள சிறார்கள் ஆத்திரத்தில் சிறையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். மேலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.  இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிறையின் உள்ளே நடைபெற்ற கலவரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

Tags:    

Similar News