வயிற்றில் புளியைக் கரைக்கும் முதல்வர்! பீதியில் கடலூர் விவசாயிகள்!!

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய இரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைய உள்ளது என கடந்த 2017 வருடம் ஜூலை 19ம் தேதி தமிழகஅரசு வெளியிட்ட குறிப்பு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 45

Update: 2020-02-11 22:59 GMT

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய இரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைய உள்ளது என கடந்த  2017 வருடம் ஜூலை 19ம் தேதி தமிழகஅரசு வெளியிட்ட குறிப்பு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 45 கிராமங்களில் 22,938 ஹெக்டேர் அதாவது சுமார் 57ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு முதல்வர் அமெரிக்கா சென்று இருந்த போது, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டு இருந்தார். இந்நிலையில் தான் கடலூர் மாவட்டத்தில் அமைய உள்ள பெட்ரோலிய ரசாயன மண்டலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.

ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் புரந்தன்ட் சாட்டர்ஜி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பிப்ரவரி 7ம் தேதி சந்தித்து உள்ளார்.   இந்த தொழிற்சாலைக்கான நிலங்கள் எப்படி கிடைக்கும் என விளக்கம் அளிக்கவில்லை. இதனால், விவசாயிகள் தங்களது நிலத்திற்கு ஏதாவது ஆபத்து வந்துவி டுமோ என்ற கவலையில் மூழ்கியுள்ளனர். 

newstm.in

Tags:    

Similar News