குண்டும் குழியுமான சாலைகளில் அழகிப் போட்டி.. பெண்கள் நூதன போராட்டம் !!

குண்டும் குழியுமான சாலைகளில் அழகிப் போட்டி.. பெண்கள் நூதன போராட்டம் !!

Update: 2021-09-05 19:00 GMT

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க நூதன முறையில் பெண்கள் நடத்திய போராட்டத்தின் வீடியோ, இணைய தளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.

மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் அண்மைக்காலாக கனமழை பெய்தது. தற்போது ஓரளவுக்கு மழை குறைந்துள்ளது. எனினும் பெய்த மழையால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே பல ஆண்டுகளாக சாலைகள் சேதமடைந்திருக்கும் நிலையில் தற்போது பெய்த மழையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதில் ஒன்றாக, தலைநகர் போபாலின் டேனிஷ் நகர் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. அங்கு, அதிக வரி வசூலிக்கப்பட்டும் அடிப்படை வசதிகளின்றி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த நிலையில் அச்சாலையின் பாதிப்பு குறித்தும், நிர்வாகத்தின் கவனத்தைக் கவர்வதற்காகவும் அன்ஷு குப்தா என்பவர் குண்டும் குழியுமான சாலையில் அழகிப் போட்டியை நடத்த ஏற்பாடு செய்தார். தண்ணீர் தேங்கியுள்ள சாலையில் வளைந்து நெளிந்து பெண்களும் குழந்தைகளும் பதாகைகளுடன் நடந்து கேட் வாக் சென்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


newstm.in


 

Tags:    

Similar News