பிச்சை எடுங்க! திருடுங்க! ஆனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தரணும்! நீதிமன்றம் அதிரடி!

பிச்சை எடுங்க! திருடுங்க! ஆனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தரணும்! நீதிமன்றம் அதிரடி!

Update: 2021-04-22 16:50 GMT

 

கொரோனா தொற்று அதிகரித்து நோயாளிகள் அதிக அளவில் உயிரிழந்து வரும் சூழலில், அவர்களது உயிரைக் காக்க பிச்சை எடுத்தோ, திருடியோ அல்லது எதையாவது செய்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்யுங்கள் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை சமாளிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

அப்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிர் பறிபோகும் ஆபத்தை உணர்ந்தபோதும் இதனை சமாளிக்க மத்திய அரசு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்தி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் இரும்பாலை உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக அந்த சிலிண்டர்களை தொழிற்சாலை தேவைக்காக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

டெல்லி மேக்ஸ் பட்பர்கஞ்ச் மருத்துவமனையில் மட்டும் இதுபோன்ற நிலைமை கிடையாது. பல மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது. எல்லா மருத்துவமனைகளாலும் நீதிமன்றத்துக்கு வர முடியாது என்று நீதிபதிகள் கடுமையாக பேசினர்.

ஆக்சிஜன் கையிருப்பில் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் கேளுங்கள், பிச்சை எடுங்கள், கெஞ்சிக் கேளுங்கள், திருடுங்கள், என்னவெல்லாம் முடியுமோ அதை உடனே செய்யுங்கள், என்று நீதிபதிகள் பேசினர்.

Tags:    

Similar News