பிச்சை எடுப்பதில் தகராறு – தம்பதி அடித்துக் கொலை!!

பிச்சை எடுப்பதில் தகராறு – தம்பதி அடித்துக் கொலை!!

Update: 2021-12-18 18:17 GMT

ராமேஸ்வரத்தில் யாசகம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலை சுற்றி, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த தம்பதியினருக்கும் மற்றொரு யாசகம் எடுக்கும் நபருக்கும் இடையே யாசகம் எடுப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் இரும்பு கம்பியால் தாக்கியதில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த தம்பதிகள் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராமேஸ்வரம் போலீசார், உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் உயிரிழந்த தம்பதி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், ராமு என தெரியவந்தது. இவர்களை அடித்துக் கொலை செய்த யாசகர் யார் என்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News