உஷார்!! செல்போன் நம்பர் வெச்சு 48 லட்சம் மோசடி! வீட்டையும் விற்ற கொடூரம்!

கடன் பெற்று தருவதாக கூறி அடுத்தவர் வீட்டை விற்று மோசடி.. இடைத்தரகர் கைது.. கூட்டாளிகளுக்கு வலைவீச்சு

Update: 2020-02-09 18:36 GMT

சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் (46). கிறிஸ்துவ மதபோதகரான இவர், கடந்த 2017ம் ஆண்டு தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.20 லட்சம் கடன் வாங்க, மயிலாப்பூரை சேர்ந்த இடைத்தரகர் லோகநாதன் (53) என்பவரை அணுகியுள்ளார். அப்போது, வீட்டு பத்திரத்தை வாங்கிய லோகநாதன், தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்று மோசடி செய்துள்ளார்.

இதன் மூலம் கிடைத்த பணத்தை வங்கி மூலம் பெறுவதற்காக வின்சென்ட் பெயரில் அவருக்கு தெரியாமல் செல்போன் நம்பர் மட்டும் மாற்றி கணக்கு தொடங்கி உள்ளனர். அந்த கணக்கிற்கு பணம் வந்தவுடன், போலி செல்போன் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தியை வைத்து ரூ.48 லட்சத்தை எடுத்துள்ளனர்.

இதுபற்றி பின்னர் அறிந்த வின்சென்ட், மோசடியில் ஈடுபட்ட லோகநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தலைமறைவாக இருந்த இடைத்தரகர் லோகநாதனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News