கொரோனாவிடமிருந்து எச்சரிக்கையாக விலகி இருக்க வேண்டும் - கொரோனா கால அனுபவம் பற்றி ரகுல் ப்ரீத் சிங் !
கொரோனாவிடமிருந்து எச்சரிக்கையாக விலகி இருக்க வேண்டும் - கொரோனா கால அனுபவம் பற்றி ரகுல் ப்ரீத் சிங் !
தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் நடிகை ரகுல்பிரீத் சிங்.இவர் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் படத்தில் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளார்.
இது குறித்து விடுத்த செய்திக்குறிப்பில்,
“சினிமாவில் என்னுடன்தான் எனக்கு போட்டி. இதற்கு முன்பு நடித்த படத்துக்கும், இப்போது நடிக்கும் படத்துக்கும் நடிப்பு ரீதியாக ஒருபடி மேல் ஏறி இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எப்போதும் என் மனதில் இருக்கும். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் படப்பிடிப்பிற்கு செல்ல தயங்கினேன்.
படப்பிடிப்பில் எனக்கும் கொரோனா வந்தது. நான் பொதுவாக உணவிலும், ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பேன். அதனால் அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் , சிரமமின்றி கொரோனா மறைந்து விட்டது . தனிமைப்படுத்தலில் யோகா பிராணயாம மூச்சு பயிற்சிகள் செய்தேன். இதனால் 12 நாட்களில் குணமாகி கொரோனாவில் இருந்து மீண்டு விட்டேன். அதன் பிறகான வழக்கமான வேலைகளிலும், உடற்பயிற்சி செய்கையிலும் கடுமையான உடல் வலியும், அசதியும் தொடர்து இருந்தது. கொரோனாவிடமிருந்து எச்சரிக்கையாக விலகி இருக்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களை இன்னும் கவனமாக பார்த்துக்கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.