உஷார்!! தனியாக செல்லும் இளம்பெண்கள் தான் இலக்கு!
தனியாக செல்லும் பெண்கள் தான் இலக்கு.. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இளைஞ சிறையில் அடைப்பு
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி தொழில்நுட்ப பெண் அதிகாரி, தனது இருசக்கர வாகனத்தில் இரவில் வீட்டிற்கு சென்றுள்ளார். பல்லாவரம் கார்டன் சாலையில் சென்றபோது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், பெண் அதிகாரியிடம் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் அதிகாரி கூச்சலிட்டதால் மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். மேலும் இதுகுறித்து அவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
newstm.in