பிக் பாஸ்: சர்ச்சை நடிகைக்கு வாரத்திற்கு ரூ. 35 லட்சமா?
பிக் பாஸ்: சர்ச்சை நடிகைக்கு வாரத்திற்கு ரூ. 35 லட்சமா?
பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இளம் நடிகர் சுஷாந்த் சிங் மரணம். அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் வழக்கும் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரபர்த்தி கைது என பரபரப்பாக இருந்தது.
இந்த நிலையில், சல்மான் கான் தொகுத்து வழங்கவிருக்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 15ஆவது சீசன் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மானுக்கு ரூ. 350 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி பிக் பாஸ் 15 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது. வாரத்திற்கு ரூ. 35 லட்சம் சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். ஒரு போட்டியாளருக்கு இவ்வளவு அதிக சம்பளம் கொடுப்பது இது தான் முதல் முறை ஆகும்.
தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் காதலி தான் ரியா சக்ரபர்த்தி. ரியா மட்டும் அல்ல சுஷாந்தின் முன்னாள் காதலியான நடிகை அங்கிதா லோகந்தேவும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்றார்.
இந்த நிலையில் தற்போது, பிக் பாஸ் 15 போட்டியாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் தேஜஸ்வி பிரகாஷ் சென்ற அதே ஸ்டுடியோவுக்கு ரியாவும் சென்றார். அவர் சென்ற அதே நாள் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான தல்ஜித் கவுரும் அதே ஸ்டுடியோவுக்கு வந்தார். அதன் பிறகே ரியா பிக் பாஸ் 15 வீட்டிற்கு செல்கிறார் என்று பேச்சு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
newstm.in