BIG BREAKING : ரூ.25 லட்சம் வழங்கினார் நடிகர் விஜய் சேதுபதி..!
BIG BREAKING : ரூ.25 லட்சம் வழங்கினார் நடிகர் விஜய் சேதுபதி..!
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து பலரும் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய்சேதுபதி, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கினார்.